கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த பேராசிரியர்கள்!! பீதியில் பெற்றோர்..
தஞ்சாவூர் மாவட்டம், கோவிலாச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அரபு மொழி பேராசிரியராக 43 வயதான ஜியாவுதீன் என்பவர் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறையை சேர்ந்த இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக தனது கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த மாணவி, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், மொத்தம் ஆறு பேர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், போலீசார் ஜியாவுதீனை மட்டும் இந்த வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறும் போது, "நான் புகார் அளித்த ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் ஒருவர் மீது மட்டும் தான் நடிவடிக்கை எடுத்துள்ளனர். மற்ற 5 பேர், பணபலம் உள்ளவர்கள் என்பதால் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். இதனால் வெளியே இருக்கும் ஐந்து பேரும், நான் கொடுத்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்துக் வருகின்றனர்" என்றார்.
Read more: பெண்களே கவனம்!! இயற்க்கை உபாதை கழிக்க சென்ற 40 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்…