தாயின் போனில் இருந்த ஆபாச வீடியோவை பார்த்து, 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன்!!!
ஆந்திர மாநிலத்தில் அடி கொப்பக்கா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில், 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். தனக்கென்று தனியாக செல்போன் இல்லாததால், சிறுவன் தனது தாயின் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளான். வழக்கம் போல், சிறுவன் தனது தாயின் செல்போனை பார்த்த போது, அதில் ஆபாச வீடியோ ஒன்று இருந்துள்ளது. அந்த வீடியோவை முழுவதுமாக பார்த்த சிறுவன், வீடியோவில் உள்ளதை பார்த்து, 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் பதறிப்போன 5 வயது சிறுமி, தனக்கு நடந்த கொடுமைகளை பற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பலாத்காரம் செய்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தனது அம்மாவின் போனில் இருந்த ஆபாச வீடியோவை பார்த்து, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளான்.
நாகரீகம் என்ற பெயரில், நாடு அழிந்து வருகிறது என்றே சொல்லலாம். குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்ய கூடாது என்பதற்காக, பெற்றோர்கள் செல்போனை கொடுப்பது பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. மேலும், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, சிறுவர்கள் நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களின் மனநிலை மட்டும் இல்லாமல், உடல்நிலையும் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனால், முடிந்தவரை உங்கள் குழந்தைகளின் கையில் செல்போனை கொடுக்க வேண்டாம். ஒரு வேலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்கள் என்ன பார்கிறார்கள் என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.