முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2023-24-ம் நிதியாண்டு டிசம்பர் 25 வரை நிலக்கரி உற்பத்தி 664.37 மில்லியன் டன்னை எட்டியது...!

08:46 AM Dec 30, 2023 IST | 1newsnationuser2
Advertisement

நிலக்கரி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் 25 வரை 2023-24 –ம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி ஒட்டுமொத்த சாதனையாக 664.37 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 12.29% வளர்ச்சியைக் காட்டுகிறது.நிலக்கரி ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் 25 வரை 2023-24-ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த சாதனை 692.84 மில்லியன் டன்னாக இருந்தது.

Advertisement

இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 11.32% வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த அதிகரிப்பு மின் துறையின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய நீடித்த, வலுவான நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்கிறது.மேலும், 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் 25 வரை மின் துறைக்கு ஒட்டுமொத்த நிலக்கரி விநியோகம் 8.39% அதிகரித்து, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 532.43 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 577.11 மில்லியன் டன்னை எட்டியது.

2023 டிசம்பர் 25 நிலவரப்படி, சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒட்டுமொத்த நிலக்கரி கையிருப்பு நிலை 91.05 மில்லியன் டன்னை எட்டியது.

Tags :
central govtcoaldecember
Advertisement
Next Article