For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செம சான்ஸ்...! 10 & 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு... மாதம் ரூ.70,000 ஊதியத்தில் வேலை...!

Coaching course for students who have completed 10th & 12th standard.
06:15 AM Aug 13, 2024 IST | Vignesh
செம சான்ஸ்     10  amp  12 ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு    மாதம் ரூ 70 000 ஊதியத்தில் வேலை
Advertisement

10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவிகளுக்கு பயிற்சி வகுப்பு.

Advertisement

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஷ்டிட்யூட்டில் இளங்கலை அறிவியல் B.Sc., (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) படிப்பில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பட்டயப்படிப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் (Craftmanship Course in Food Production and Patisserie) உணவு மற்றும் பானசேவையில் கைவினைத்திறன் படிப்பு (Craftman Course in food and Beverage Service) பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு (Diploma in Bakery & Confectionary) சேர்ந்து படித்திடவும், படிப்பு முடித்தவுடன் நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள் விமானம் நிறுவனம், கப்பல் துறை மற்றும் சேவை துறை சார்ந்த நிறுவனங்கில் பணிபுரிய வழிவகை செய்யப்படும்.

சென்னை தரமணியில் உள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது ISO தரச்சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமையப்பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. American Council of Business அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துனர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survery 2022-ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் பதின்மூன்றாவது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில் படிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

மேலும், ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையளதம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி:18.08.2024. மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம். எண்-3. சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிபுரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Tags :
Advertisement