For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

CM Stalin | நம்மளா? அவங்களா? பார்க்கலாம்..!! வைரலாகும் ’ஸ்டாலின் குரல்’ வீடியோ..!!

04:44 PM Mar 22, 2024 IST | 1newsnationuser6
cm stalin   நம்மளா  அவங்களா  பார்க்கலாம்     வைரலாகும் ’ஸ்டாலின் குரல்’ வீடியோ
Advertisement

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 'ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Advertisement

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன. குறிப்பாக பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவை கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது.

இன்று மாலை திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை துவங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கிடையே, திமுக சார்பில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது, ’ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப் போறாரு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட வீடியோ அரசியலில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் வகையில் ’இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் - ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் புதிய வீடியோ ஒன்றை திமுக ஐடி விங் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Read More : மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி..!! பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்..!!

Advertisement