உறவினருடன் தகாத உறவில் இருந்த 9ஆம் வகுப்பு மாணவி..!! வீட்டை விட்டு ஓடிச்சென்று தூக்கில் தொங்கிய அதிர்ச்சி சம்பவம்..!!
சீர்காழி அருகே தகாத உறவு காரணமாக மாயமான சிறுமி உறவினருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 38 வயது கூலி தொழிலாளி, தனது உறவினர் மகளான 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார். பின்னர், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி சிறுமி திடீரென வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே, கடந்த 8ஆம் தேதி சிறுமியை அவரது வீட்டில், உறவினரான கூலித் தொழிலாளி வந்து விட்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து மீண்டும் 9ஆம் தேதி சிறுமியும், அவரது உறவினரும் மாயமாகி உள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சீர்காழி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து கூலி தொழிலாளியும், சிறுமியும் தீவிரமாக தேடி வந்தனர். இதனையறிந்து, அவர் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் திருநகரி சாலையில் உள்ள மாந்தோப்பில் சிறுமியும், அவரது உறவினரும் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தகாத உறவினால் 14 வயதான 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, உறவினருடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Read More : ’ரொம்ப பயங்கரமான ஏரியா இருக்கும் போல’..!! இரவில் நடக்கும் மர்மம்..!! எங்கு தெரியுமா..?