தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் உதயம்..? தீயாய் பரவும் தகவல்..!! உண்மை என்ன..?
தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது.
தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட 38 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் ஆத்தூர், கும்பகோணம், பொள்ளாச்சி, விருத்தாசலம் மற்றும் செய்யாறு ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குடியரசு தினத்தன்று வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இது தொடர்பாக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் ஆத்தூர், கும்பகோணம், பொள்ளாச்சி, விருத்தாசலம், செய்யாறு ஆகிய 5 புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக குடியரசு தினத்தன்று அறிவிப்பு வெளியாகவுள்ளது” என்று ஒரு நாளிதழின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இது முற்றிலும் பொய்யான தகவல். இந்தப் புகைப்படம் பல மாதங்களாகப் பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற எந்தவொரு அறிவிப்பும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளது.