முக்கிய அறிவிப்பு...! 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு இன்று முதல்...!
2024-25ஆம் கல்வியாண்டுக்கான, மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், இன்று முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தலாம் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; அரசுத் தேர்வு இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி, பொதுத் தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், இன்று முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை தேர்வுக் கட்டணத்தை மாலை 5 மணி வரை கட்டணத்தை செலுத்தலாம். கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்ற மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மாணவர்கள் ரூ.225 மற்றும் ரூ.175 என இரண்டு விதமான கட்டணங்களைச் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பெறலாம். தமிழ் வழியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் அல்லாத பிறமொழியில் ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்சி & எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் எஸ்சி மாற்றுத்திறனாளிகள் மற்றும் எம்பிசி வருமான உச்சவரம்பு ஏதுமின்றி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக பெற்றோர்கள் சம்பாதிக்கும் BC/BCM சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியார், மெட்ரிகுலேஷன் மற்றும் மிஷனரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வுக் கட்டணத்தில் தள்ளுபடி பெறத் தகுதியற்றவர்கள். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவது குறித்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு, பள்ளித் தலைமையாசிரியர்கள் அந்தந்த மாவட்ட அரசு தேர்வு ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.