தமிழ்நாட்டில் உயருகிறது மகளிர் உரிமைத்தொகை..!! எவ்வளவு தெரியுமா..? முன்கூட்டியே கணித்த சீமான்..!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வளவு உயரும் என்பதை சீமான் கணித்துள்ளார்.
சமீபத்தில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. இரண்டிலுமே ஆளுங்கட்சிகள் வெற்றிபெற்றன. மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்டில் ஜேஎம்எம் கூட்டணியும் ஆட்சியை தக்கவைத்தன. இவர்களின் வெற்றிக்கு பெண் வாக்காளர்களின் வாக்குகள் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், தமிழ்நாட்டில் இருப்பது போல் மகளிர் உரிமை தொகை இந்த இரண்டு மாநிலங்களிலும் வழங்கப்பட்டது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் ‘லட்கி பெஹன் யோஜனா’ என்கிற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் 2.5 கோடி பெண்களுக்கு தேர்தல் வரை தலா ரூ.1,500 வீதம் வழங்கப்பட்டது. மேலும், இது விரிவுப்படுத்தப்பட்டு, ரூ.2,100 ஆக அதிகரிக்கப்படும் என மகாயுதி கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதிகள் தற்போது வாக்குகளாக மாறியுள்ளன.
இந்த திட்டம் தமிழகத்தில் தான் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை பார்த்து கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றின. இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 சட்டசபை தேர்தலில் உரிமைத்தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது தான் திமுகவின் தேர்தல் அறிக்கையாக இருக்கும் என்று முன்கூட்டியே கணித்துள்ளார்.