சர்ச்க்கு சென்ற பெண்; பாசமாக பேசி பாஸ்டர் செய்த வேலை.. பெண் அளித்த பரபரப்பு புகார்..
மகேஷ் என்ற நபர் ஒருவர், திருத்தணியில் வசித்து வருகிறார். இந்து மதத்தில் இருந்த இவர், அண்மையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இதையடுத்து, அவர் தன்னை ஊழியம் செய்ய ஒப்புக்கொடுத்துள்ளார். அதன் படி, அவர் காளையார் கோவில் அருகில் உள்ள பெரிய நரிக்கோட்டையில் உள்ள சர்ச் ஒன்றில் ஊழியம் செய்துள்ளார். மேலும், அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள சர்ச்சில் ஊழியம் செய்துவந்துள்ளார். அப்போது அந்த சர்ச்சுக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாவமன்னிப்பு கேட்க சர்ச்சுக்கு சென்றுள்ளார். விவாகரத்தான அந்த பெண்ணிற்கும் மகேஷிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மகேஷும் அந்த பெண்ணும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதையடுத்து, அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். தற்போது அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், மகேஷ் அந்தப் பெண்ணையும் குழந்தையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், சம்பவம் குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மகேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: அதிர்ச்சி!!! பள்ளி வளாகத்தில், மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை..