கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஸ்டார் ஏன் வீட்டில கட்டி தொங்க விடுறாங்க தெரியுமா.? அதன் வரலாற்றுப் பின்னணியும் காரணங்களும்.!
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களின் முக்கியமான பண்டிகையாகும். தேவ தூதரான இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்துவ மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வருடத்தின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்களே மீதம் இருக்கிறது. பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்தவ மக்களின் வீட்டில் கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த கிறிஸ்துமஸ் ஸ்டார் கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஒரு அடையாளமாகவே இருக்கிறது. இந்த ஸ்டார் கொண்டாட்டத்திற்கு ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது.
இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தை ஒரு வான் நட்சத்திரம் அடையாளம் காட்டியதாகவும் அந்த நட்சத்திரத்தை நினைவு கூறுவதற்காகவும் அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும் கிறிஸ்தவர்கள் தங்களது கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது நட்சத்திரங்களை வீடுகளில் கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள். இதுதான் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அனைத்து கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் ஸ்டார் தொங்க விடுவதற்கான காரணமாக இருக்கிறது. இதனைப் பற்றிய குறிப்புகள் சிரியாவின் வான சாஸ்திரங்களிலும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.