முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சித்திரை அமாவாசை இன்றா… நாளையா..! இதை மட்டும் செய்தால் கஷ்டம் நீங்கி செல்வம் செழிக்கும்…!

06:13 AM May 07, 2024 IST | Kathir
Advertisement

கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் அடிப்படையில் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு ஒளி கிரகங்களுமே ஒரே ராசியில் ஒன்றாக சேரும் நாள் தான் அமாவாசை. தமிழ் ஆண்டின் முதல் அமாவாசையான சித்திரை அமாவாசை(இன்று) பல சிறப்புகளை கொண்டது. இன்று (மே மாதம் 7 தேதி) முன்பகல் 11 மணிக்கு அமாவாசை திதி தொடங்குகிறது, மே 8ஆம் தேதி காலை 9.20க்கு முடிகிறது.

Advertisement

எனவே, அமாவாசை, செவ்வாய் கிழமையா அல்லது புதன் கிழமையா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். அமாவாசை திதி இன்று காலை 11 மணிக்கு தொடங்கி, நாளை காலை 9.20க்கு முடிவதால், அமாவாசை திதி முடிந்த பிறகு, மதியம் தர்ப்பணம் அல்லது படையல் செய்யக்கூடாது. எனவே, அமாவாசை திதி இன்று காலை 11 மணிக்கு மேல் தொடங்கினாலும், இன்று தான் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும்.

அமாவாசை தர்ப்பணம் இன்று காலை 11 மணிக்கு மேல் செய்யலாம். சூரியன் உச்சம் பெறும் நாளில் சித்திரை அமாவாசை திதி தோன்றுவதால், சூரியனுக்கு நீர் வைத்து வழிபாடு செய்வது உகந்தது. மேலும் இந்த அமாவாசை நாளன்று நீர் நிலைகளுக்குச் சென்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அப்படி நீர் நிலைகளுக்கு போக முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே முன்னோர்களின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து, படையல் வைத்து, தர்ப்பணம் கொடுத்து நான்கு முதல் பத்து பேருக்கு உணவு கொடுப்பதால் எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும்.

இன்றைய தினம் விரதமிருந்து கருப்பு, வெள்ளை எள் கலந்த சாதம் காக்கைக்கு வைப்பதால் பலன் உண்டாகும். இந்நாளில் கடைகள், நிறுவனங்கள் வைத்திருப்போர் பூசணிக்காயை வாங்கி திருஷ்டி சுற்றி உடைத்தால் கடை மீது உள்ள திருஷ்டி நீங்கி வியாபாரம் நல்ல நிலையை அடையும் என்பது வழக்கம். எப்போதுமே சித்திரை மாதம் வரும் அமாவாசை மேஷம் ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் ஒன்றாக இணையும் பொழுது தோன்றும். அதாவது மேஷ ராசியில் செவ்வாயின் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் காலத்தில், சந்திரன் மேஷம் ராசியில் பெயர்ச்சியாகும் பொழுது சித்திரை அமாவாசை திதி தோன்றும்.

சித்திரை அமாவாசையான இன்றைய தினத்தில் விரதம் இருந்து வழிபட்டால் எடுக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். இதுவரை வேலை கிடைக்காமல் அவதிப்பட்டவர்களுக்கு, விரைவில் வேலை கிடைக்கும். அதேபோல் திருமணமாகாமல் தாமதம் ஆனவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் விரைவில் நடக்கும். வீட்டில் இருக்கும் கஷ்டம் நீங்கி, பொன், பொருள் போன்றவற்றின் சேர்க்கை அதிகரிக்கும். நீண்ட நாள் நோய்கள் நீங்கப் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Tags :
chithirai amavasai 2024சித்திரை அமாவாசை
Advertisement
Next Article