For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மனித மூளையில் சிப்!. இனி மொபைல் போனுக்கு வேலை இல்லை!. எலான் மஸ்க் ஷாக் ட்வீட்!.

Phones to go obsolete, Neuralink users will lead the way: Elon Musk
07:00 AM Jun 19, 2024 IST | Kokila
மனித மூளையில் சிப்   இனி மொபைல் போனுக்கு வேலை இல்லை   எலான் மஸ்க் ஷாக் ட்வீட்
Advertisement

Neuralink: வருங்காலத்தில் மொபைல் போனே இருக்காது என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

Advertisement

ஸ்பேஸ் X, டெஸ்லா, X போன்ற போன்ற தலைசிறந்த நிறுவனங்களின் CEO-ஆன எலான் மஸ்க், நியூராலிங்க் எனப்படும் மனித மூளையில் சிப் பொருத்தும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலமாக கை, கால்கள் செயலிழந்தவர்களின் மூளையில் சிப்பை பொருத்தி அவர்கள் எதை சிந்திக்கிறார்களோ அதை அப்படியே கணினி மற்றும் மொபைல் வாயிலாக செயல்படுத்தும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது அந்நிறுவனம்.

தொடக்கத்தில் இவர்களது சிப்பை விலங்குகளுக்குள் பொருத்தி ஆய்வு செய்து வெற்றி கண்டனர். பின்னர் அமெரிக்க அரசாங்கம் மனிதர்களுக்குள் பொறுத்தி சோதனை செய்ய அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து நோலன் ஆர்ஃபா என்ற நபரின் மூலையில் நியூராலிங்க் நிறுவனத்தின் சிப் பொருத்தப்பட்டு வெற்றி கண்டது.

இதுகுறித்து வெளிப்படையாகக் கூறிய எலான் மஸ்க், “இந்த தொழில்நுட்பம் மூலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடல் கட்டுப்பாட்டை முழுமையாக மீட்டெடுப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், துண்டிக்கப்பட்ட நரம்பு சிக்னல்களை இதன் மூலமாக இணைத்து அவர்களது உடல் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், வருங்காலத்தில் மொபைல் போனே இருக்காது என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து Not Elon Musk என்ற கணக்கில் வெளியான ஒரு பதிவுக்கு பதிலளித்த ​​மஸ்க், "எதிர்காலத்தில், தொலைபேசிகள் இருக்காது, வெறும் நியூராலிங்க்ஸ் மட்டுமே இருக்கும்" என்று கூறியுள்ளார்.

Not Elon Musk வெளியிட்ட பதிவில், எலான் மஸ்க் தலையில் பொறுத்தப்பட்ட சிப்களுடன் மொபைல் போன் ஒன்றை பார்த்துக்கொண்டிருப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், "சிந்திப்பதன் மூலமே உங்கள் புதிய எக்ஸ் ஃபோனைக் கட்டுப்படுத்த, உங்கள் மூளையில் நியூராலிங்க் சிப்பை நிறுவிக்கொள்வீர்களா?" என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நியூராலிங்க் தனது ஆய்வில் பங்கெடுக்க தயாராக இருக்கும் இரண்டாவது நபரைத் தேடுகிறது. தேர்வுசெய்யப்படும் நபர் மூளையில் நியூராலிங்க் சிப்பைப் பொருத்திக்கொள்ளலாம். தங்கள் கணினியையும் தொலைபேசியையும் தங்கள் மனத்தினால் கட்டுப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Readmore: நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா..? பலருக்கும் இருக்கும் சந்தேகம்..!! உண்மை என்ன..?

Tags :
Advertisement