காஸாவில் தரையிறங்கும் சீன ராணுவம்!. இஸ்ரேலுக்கு பகிரங்க மிரட்டல்!. ஈரான் வெளியுறவு அமைச்சர் அதிரடி!.
Iran: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பொறுப்பேற்கிறார். அதற்கு முன்னதாக இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை விடுவிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், இஸ்ரேலின் எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் முழுமையாக பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி மிரட்டல் விடுத்துள்ளார். சீனாவின் அரசு சேனலுடனான உரையாடலில் பேசிய அவர், இது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கையை இஸ்ரேல் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது ஒரு பரந்த போருக்கு வழிவகுக்கும். கடந்த ஆண்டில், ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு நேரடி தாக்குதல்களை நடத்தியது, அதற்கு ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் பதிலடி கொடுத்தது.
மேலும், அப்பாஸ் அராச்சி, சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பின் போது ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்தும் விவாதித்தார். இந்த கூட்டத்தில், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள சர்வதேச தடைகளை சீனா விமர்சித்ததுடன், 2015ல் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்தது. மேலும், ஈரானின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் பெய்ஜிங் முழுமையாக ஆதரிக்கும் என்றும் வாங் யி கூறினார்,
இதேபோல், இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாட்டின் தலைவர் டேவிட் பர்னியா, இஸ்ரேல் நேரடியாக ஈரானைத் தாக்க வேண்டும், இதனால் இந்த அச்சுறுத்தலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று பரிந்துரைத்தார்.