1400 சிறுமிகள் பலாத்காரம்!. பிரிட்டன் பாராளுமன்றத்தை கலைத்து விடுங்கள்!. மன்னர் சார்லஸுக்கு எலான் மஸ்க் வேண்டுகோள்!
Elon Musk: 1400 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பிரிட்டன் பாராளுமன்றத்தை கலைத்து விடுங்கள் என்று எலோன் மஸ்க், மன்னர் சார்லஸுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரிட்டனில் வரலாற்றுக் கும்பல் பலாத்கார வழக்கு தற்போது தலைப்புச் செய்தியாக உள்ளது. 1997 முதல் 2013 வரை நடந்த 'ரோதர்ஹாம் ஊழல்' பிரிட்டனின் அரசியலை உலுக்கியது. இந்த ஊழலுக்கு க்ரூமிங் கேங் ஸ்கேன்டல் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, வடக்கு பிரிட்டனில் உள்ள சில ஊர்களில் கடந்த 1990கள் முதல் 2013 வரை தொடர்ச்சியாகப் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 1,400 குழந்தைகள் தனால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதில் பெரும்பாலும் பாகிஸ்தானைச் சேர்ந்த கேங் உறுப்பினர்களே ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. பிரிட்டனை அதிர வைத்த இந்த சம்பவத்தில் சிலருக்குப் பலர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இது தொடர்பாக மீண்டும் அரசு தலைமையில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில், பாராளுமன்றத்தை கலைக்குமாறு பிரித்தானிய மன்னர் சார்லஸிடம் உலகப் பணக்காரரான எலோன் மஸ்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், 15 ஆண்டுகளுக்கு முன்பு பொது வழக்கு இயக்குநராக இருந்தபோது, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிக்கத் தவறிவிட்டார் என்று மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மொத்தம் 23 போஸ்ட்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், "இங்கிலாந்தில், பலாத்காரம் போன்ற கடுமையான குற்றங்களில் குற்றஞ்சாட்ட போலீசாருக்கு கிரவுன் ப்ராசிகியூஷன் சர்வீஸின் அனுமதி தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆறு வருடங்கள் கிரவுன் ப்ராசிகியூஷன் தலைவராக இருந்தபோது,பிரிட்டனின் பலாத்காரம் நடக்க ஸ்டார்மர் உடந்தையாக இருந்தார். ஸ்டார்மர் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.. பிரிட்டனின் வரலாற்றில் மிக மோசமான குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். மன்னர் சார்லஸ் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும். அந்நாடு நாடாளுமன்றம் உடனடியாக கலைப்பட வேண்டும்" என்று சரமாரியாக ட்வீட் செய்துள்ளார்.
Readmore: உஷார்!. அறை ஹீட்டரில் இருந்து வெளியேறிய புகை!. மூச்சுத் திணறலால் மொத்த குடும்பமும் பலியான சோகம்!.