For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆப்பு வைக்கும் சீன பூண்டு..!! தடையை மீறி தமிழ்நாட்டில் விற்பனை ஜோர்..!! மக்களே உஷார்..!! எல்லாம் விஷமாம்..!!

Madurai, Theni, Dindigul and other districts of Tamil Nadu are selling garlic on a rampage. Currently, the supply of mountain garlic is decreasing and Chinese garlic is being sold more.
04:48 PM Sep 13, 2024 IST | Chella
ஆப்பு வைக்கும் சீன பூண்டு     தடையை மீறி தமிழ்நாட்டில் விற்பனை ஜோர்     மக்களே உஷார்     எல்லாம் விஷமாம்
Advertisement

தமிழ்நாட்டில் கொடைக்கானல், ஊட்டி ஆகிய மலை பிரதேசங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக பருவமழை பொய்த்ததால் எதிர்பார்த்த அளவு பூண்டு மகசூல் கிடைக்கவில்லை. ஒரு ஏக்கர் நிலத்தில் 400 கிலோ பூண்டு மட்டுமே அறுவடை செய்யப்பட்டதாகவும், ஆனால் அதற்கான செலவு ரூ.3 லட்சம் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில், தற்போது பூண்டில் சீனாக்காரர்கள் ஊடுருவி உள்ளனர். சீனாவில் இருந்து கொண்டு வரப்படும் பூண்டுகள், குஜராத் வழியாக தமிழ்நாட்டிற்கு வருவதாக கூறப்படுகிறது. சீன பூண்டுகளை கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை கொள்முதல் செய்து மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பூண்டு விற்பனை அமோகமாக நடக்கிறது. தற்போது, மலைப்பூண்டு வரத்து குறைந்து சீன பூண்டுகள் அதிகம் விற்கப்படுகிறது. இந்த பூண்டுகள் உற்பத்தி செய்யப்படும்போது பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், அந்த பூண்டுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டு கடந்த 2014ஆம் ஆண்டிலேயே தடை செய்யப்பட்டது. ஆனால், அதையும் மீறி தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

Read More : தமிழ்நாட்டில் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் பொது விடுமுறை..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Tags :
Advertisement