கெட்டுப்போன முட்டைகளை விரும்பி சாப்பிடும் சீன மக்கள்.! ஏன் தெரியுமா.!?
பொதுவாக உணவுகள் என்றாலே அவை ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பது தான் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. தற்போது பலரும் ஊட்டச்சத்துக்கள் குறைவான துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டு வருவது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து பல்வேறு வகையான நோய்களை ஏற்படுகிறது.
உணவுகளை எப்போதும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், சூடானதாகவும் சமைத்து சாப்பிடவே பலரும் விரும்பி வருகின்றனர். ஆனால் ஒரு சில நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அப்படியே எதிர் மாறாக இருந்து வருகிறது. இந்த உணவு பழக்கங்கள் அவர்களின் உடலுக்கும் ஏற்றுக்கொள்கிறது.
அதாவது சீன நாட்டில் உணவு பழக்கம் என்பது பூச்சியில் ஆரம்பித்து அனைத்து விதமான விலங்குகள், பறவைகள் என அனைத்தையுமே உணவாக உண்டு வாழ்பவர்கள் தான் சீன மக்கள். இந்த உணவு முறையினால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று பல்வேறு நாட்டினர் கருத்து தெரிவித்து வந்தாலும், அவர்களின் பாரம்பரியமான உணவுப் பழக்கத்தை சீன மக்கள் விட்டுக் கொடுப்பதாக இல்லை.
அப்படியிருக்க சீனாவில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் முட்டையை களிமண்ணில் மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை புதைத்து வைக்கின்றனர். இந்த காலகட்டத்தில் இந்த முட்டை நன்றாக அழுகி கருப்பு மற்றும் அடர் சிவப்பு நிறத்தில் மாறிவிடுகின்றது. இந்த முட்டையை விருப்பமான உணவாக அங்குள்ள மக்கள் உண்டு வருகின்றனர். மேலும் இதில் பலவிதமான சத்துக்களும் இருக்கின்றது என்று நம்பப்படுகிறது. மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட முட்டையை உண்பதால் அங்குள்ள மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.