மன நோயாளிகள் ஆகும் குழந்தைகள்! பெற்றோர்களே, உங்கள் குழந்தையின் மீது அன்பு இருந்தால், உடனே இதை செய்து விடுங்கள்..
சமீப காலமாக, பெரியவர்கள் மட்டும் இல்லாமல் சிறுவர்களும் செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். செல்போன் வாங்கி தரவில்லை என்றும், இருக்கும் செல்போனை விளையாட கொடுக்கவில்லை என்றும் சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்ட சமபவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிகமாக செல்போன் பயன்படுத்திய சிறுவனை அவனது தந்தையே பேட்டால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவமும் நடந்துள்ளது. இப்படி குழந்தைகள் செல்போனிற்கு அடிமையாவதால், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
குழந்தைகள் செல்போனை வைத்துக்கொண்டு சுதந்திரமாக தனிமையில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் ஆபாச படங்களை பார்த்து சீரழிகின்றனர். தாயின் செல்போனில் இருந்த ஆபாச படத்தை பார்த்து சிறுவன் ஒருவன் தனது பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். அதே சமயம், சென்னையில் ஆபாச படம் பார்த்த 13 வயது சிறுவன், தனது சொந்த தங்கையான 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இது போன்ற சமூக சீர்கேடுக்கு வழிவகுப்பது செல்போன் தான்.
மேலும் டிவி, மொபைல் போனில் அதிக நேரம் கழிக்கும் குழந்தைகளின் கல்வித்தரம் குறைகிறது என்று பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றது. மொபைல் போன் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு/பதின் வயதினருக்கு மூளைச் செயல்திறன் குறையும் 'பிரெயின் ராட்' என்ற பிரச்னை ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகமாக மொபைல் பயன்படுத்தும் போது, அவர்களுக்கு நிஜ உலகத்தில் தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது. இதனால் அவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடான பிரெயின் ராட் ஏற்படுகிறது. இது ஒருவகையான போதைக்கு அடிமையாவது.
இதில் இருந்து மீள, தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். எனினும் இந்த பாதிப்பில் இருந்து மீள்வது சாதாரணமானது அல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், 12 வயதுக்குள்பட்ட குழந்தைகள், குறிப்பாக சமூக ஊடகங்களில் தரம் குறைந்த, உண்மையல்லாத விடியோக்களை இரண்டு மணி நேரத்திற்கு மேல் பார்ப்பது அவர்களின் அறிவாற்றல், படைப்பாற்றலைத் தடுக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மூளைச் செயல்திறன் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இருக்கும் அறிகுறிகள்: நினைவுத் திறன் குறைதல், அமைதியின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம், அதிக உணர்ச்சியை வெளிப்படுத்துதல், கல்வி செயல்திறன் குறைதல், சிந்தனையில் தெளிவின்மை, சமூக தொடர்புகளை விரும்பாமை ஆகியவை ஆகும். இவை அனைத்தும் மன நல பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும்.
இதனால், குழந்தைகளை அதிக நேரம் கணினி/ மொபைல் திரை பார்க்க விடாமல், பெற்றோர் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும். மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது உள்ளிட்ட சமூகத் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.