Tn govt..! குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை + ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்...!
குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006ன்படி, பெண்களின் திருமண வயது 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும், ஆண்களின் திருமண வயது 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும் உள்ளது. ஆனால் இதை கடைபிடிக்காமல் பல இடங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டதில் இதுவரை 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இப்படி குழந்தை திருமணம் நடக்கும்பட்சத்தில், குழந்தைகளுக்கான உதவி எண்.1098. மகளிர் உதவி எண்கள் 181 மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும், இந்த தகவல் தெரிவிக்கும் புகார்தாரர் பற்றிய இரகசியம் காக்கப்படும். மேலும் குழந்தை திருமணத்தை நடத்தும் நபர்கள் அல்லது ஆதரிக்கும் நபர்கள் மீது 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில், "குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006ன்படி, பெண்களின் திருமண வயது 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும், ஆண்களின் திருமண வயது 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தகவல் பெறப்பட்ட 19 குழந்தை திருமணத்தில் 15 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் 4 குழந்தை திருமணங்கள் நடந்து முடிந்துள்ளது. மேலும், நடந்து முடிந்த மற்றும் தடுத்து நிறுத்தப்பட்ட 19 குழந்தை திருமணங்களுக்கு முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் சமூக சேவை பதிவு (CSR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை திருமணம் நடத்தினாலும் அல்லது ஆதரித்தாலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1 இலட்சம் அபராதம் விதிக்கப்படும். நடத்தப்பட்ட மற்றும் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணத்திற்கு கட்டாயம் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், குழந்தை திருமணம் என தெரிய வந்தால், குழந்தைகளுக்கான உதவி எண்.1098. மகளிர் உதவி எண்கள் 181 மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் இப்புகார் மற்றும் புகார்தாரர் பற்றிய இரகசியம் காக்கப்படும்.
மேலும், விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் அணுகுமாறு" மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.