பெண் சேவைக்கான முதல்வர் விருது...! 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே...! முழு விவரம்
தமிழ்நாடு சமூக நலத் துறையின் சார்பில், 2024 ஆம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சர் அர்களால் உலக மகளிர் தின விழா மார்ச் 2024 ல் வழங்கபட உள்ளது. மேற்படி விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும்,18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைக சமூக சீர்சிருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லினக்கம், மொழி தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு கலாச்சாரம் பத்திரிக்கை நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரர்கள் சேவை பற்றிய செயல்முறை விளக்க புகைபடம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் புகைப்படம், சேவை பாராட்டி பத்திரிகை செய்தி தொகுப்பு, சேவை ஆற்றியதற்கான விரிவாக அறிக்கையுடன் கருத்துருவினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
மேலும் அதன் 2 நகல் மற்றும் சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று பெற்று 20.11.2023 க்குள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.