For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கா பயணம் இத்தனை நாட்களா..? என்ன காரணம்..?

While Chief Minister Mukherjee Stalin is going abroad to attract investments to Tamil Nadu, the travel details have been released.
10:15 AM Aug 16, 2024 IST | Chella
முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கா பயணம் இத்தனை நாட்களா    என்ன காரணம்
Advertisement

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின், வெளிநாடு செல்லவுள்ள நிலையில், பயண விவரங்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

அதன்படி, வரும் 27ஆம் தேதி அமெரிக்க புறப்படும் முதலமைச்சர் முக.ஸ்டாலின், வரும் 28ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ செல்கிறார். 28ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 2ஆம் தேதி வரை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள முக்கிய நிறுவன அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்திக்கிறார். (இடையே 29ஆம் தேதி முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், 31இல் புலம்பெயர் தமிழர்களை சந்திக்கிறார்)

செப்.2ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிக்காகோ செல்லும் முதல்வர், செப்.12ஆம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்திக்கவுள்ளார். குறிப்பாக, பார்ச்சூன் 500 பட்டியலில் முன்னணி நிறுவனங்களின் தலைமைகளை, முதலமைச்சர் சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 12ஆம் தேதியே அவர் சென்னை திரும்புகிறார்.

இடையே செப்டம்பர் 7ஆம் தேதி, வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனான நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார். தமிழக முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் முக்கிய குறிக்கோள், உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு என தமிழ்நாடு அரசின் தொழில்துறை தெரிவித்துள்ளது.

Read More : பெற்ற மகளுக்கு தாய் செய்யும் காரியமா இது..? 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க..!!

Tags :
Advertisement