முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!… கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

08:16 AM Apr 08, 2024 IST | Kokila
Advertisement

Stalin: விளையாட்டை விரும்பும் கோவை மக்களுடன் இணைந்து கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ரசிகன் என்ற முறையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூடுதலாக ஒரு வாக்குறுதியை சேர்த்து கொள்கிறேன். விளையாட்டை விரும்பும் கோவை மக்களுடன் இணைந்து கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மேற்கோள்காட்டியபடி, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்தபடியாக கோவையில் அமைய உள்ள மைதானம் தமிழகத்தின் 2-வது சர்வதேச மைதானமாக அமையும். விளையாட்டு திறனை ஊக்குவிப்பதிலும், தமிழகத்தில் விளையாட்டு துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழக அரசும் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Readmore: 92 எண்களில் போன் வருதா?… மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை!

Advertisement
Next Article