சிகாகோவில் பட்டு வேட்டி, சட்டையில் வந்த முதலமைச்சர் ஸ்டாலின்...!
நான் இன்னும் தமிழ் மண்ணில் இருப்பது போலவே உணர்கிறேன் என சிகாகோவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொழில் முதலிடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து, ஏராளமான தொழில் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதன் மூலம், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான பல் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி வருகின்றன. இந்நிலையில், இந்த பயணத்தின் ஒரு அங்கமாக தான், தமிழ் வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றியுள்ளார்.
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலை விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்; நான் அமெரிக்காவில் இருக்கிறேனா அல்லதுதமிழ் மண்ணில் இருக்கிறேனா என்று தெரியவில்லை., நான் இன்னும் தமிழ் மண்ணில் இருப்பது போலவே உணர்கிறேன். அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது.
தமிழகத்தில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ அதைப்போல அல்ல அதை விட மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சி உள்ளது. நான் அமெரிக்காவுக்கு Late-ஆக வந்திருக்கிறேன் ஆனால், வரவேற்பு Latest-ஆக உள்ளது என்றார்.