அமெரிக்காவில் ஸ்டாலின்.. வீடியோ காலில் அசெம்பிள் ஆன பெரிய தலைகள்..!! அந்த ரிப்போர்ட்.. சம்பவம் இருக்கு..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும், திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அவரிடம் வழங்கவுள்ளது. இதனால் கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்தபடியே காணொளி வாயிலாக திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். கே.என்.நேரு, ஏ.வ.வேலு, ஆர்.எஸ்.பாரதி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் உதயநிதி ஸ்டாலினும் இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். திமுகவின் முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
இதேபோல கட்சி தொடர்பான பல தகவல்களையும் அவர் கேட்டறிந்தார். அப்போது, கட்சி நிர்வாகிகளிடம் பலகட்டங்களாகப் பெற்ற கருத்துகளை, ஒருங்கிணைப்புக் குழுவினர் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இந்த ஆலோசனையின் போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஊர் திரும்பியதும், கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக் குழு வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
திமுகவில் மூத்தவர்கள், இளைவர்கள் தொடர்பாக விவாதங்கள் எழுந்த நிலையில், மாற்றம் குறித்து உதயநிதி தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. வெளிநாடு முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்த்த மகிழ்ச்சியில் முதல்வர் தமிழ்நாடு திரும்பவுள்ள நிலையில், அமைச்சரவையிலும் கட்சியிலும் யார் தலை உருளப்போகிறதோ என்ற அச்சத்தில் சீனியர்கள் சிலர் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில், இளைஞர்களாக இருந்தும் சரியாக செயல்படாதவர்களையும் மாற்ற முதல்வர் முடிவு செய்து வருகிறார். இனி திமுகவிலும் ஆட்சியிலும் அதிரடி சரவெடிகளுக்கு பஞ்சம் இருக்காது. இந்த விவகாரங்கள் குறித்தே நேற்று காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைப்பு குழுவினரிடம் ஆலோசனை நடத்தியுள்லதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more ; ஆதி திராவிடர் விடுதியில் மாணவர்களுக்கு போதிய உணவு இல்லை..! EPS குற்றச்சாட்டு