முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தனது ஒரு மாத சம்பளத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

11:05 AM Dec 08, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கினார். அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags :
ஒரு மாத சம்பளம்சென்னைநிவாரண நிதிமிக்ஜாம் புயல்முதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
Next Article