முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முதல்வரே..!! கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று ஆய்வு பண்ணுங்க..!! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

The Madras High Court has directed that the Chief Minister Mukherjee Stalin or the Ministers should visit the Kalvarayan Hill area.
12:20 PM Jul 24, 2024 IST | Chella
Advertisement

கல்வராயன் மலை பகுதியில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அல்லது அமைச்சர்கள் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மலையில் வசித்து வரும் மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று மக்கள் நிலையை முதல்வர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சர் உதயநிதி சென்று பார்வையிட வேண்டும். நாங்கள் சென்று பார்வையிடுவதை விட அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” என தெரிவித்தனர்.

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து, தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, வழக்கு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Read More : ஒருமுறை டெபாசிட் செய்தால் மாதந்தோறும் நல்ல வருமானம் பெறலாம்..!! இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Tags :
chennai high courtministerstalin
Advertisement
Next Article