செக் பவுன்ஸ் வழக்கு..!! பிரபல பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு சிறை..!! ரூ.3.72 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவு..!!
செக் பவுன்ஸ் வழக்கில் பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மாவை 3 மாதங்கள் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கு பதிவானது. அதாவது, படக்குழுவுக்கு செக் கொடுத்து அது பவுன்ஸ் ஆனதாக ராம் கோபால் வர்மா மீது புகார் கொடுக்கப்பட்டது.
பலமுறை சம்மன் அனுப்பியும் ராம் கோபால் வர்மா விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவருக்கு ரூ.3.72 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது புதிய படமான "சிண்டிகேட்" தயாரிப்பதாக அறிவிப்பதற்கு முன்பே, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு மகேஷ்சந்திர மிஸ்ரா மூலம் ஸ்ரீ என்ற நிறுவனம் காசோலை திரும்பப் பெற்றதாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு வர்மாவின் நிறுவனத்திற்கு எதிராக இருந்தது. சத்யா, ரங்கீலா, கம்பெனி மற்றும் சர்கார் போன்ற படங்களின் மூலம் வெற்றியை ருசித்த வர்மா, சமீபத்திய ஆண்டுகளில் ஒரு முத்திரையைப் பதிக்கவில்லை. மேலும், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கினார். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றின்போது, அவர் தனது அலுவலகத்தை விற்க வேண்டியிருந்தது.
Read More : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! விறுவிறுப்புடன் நடக்கும் தபால் வாக்குப்பதிவு..!!