For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

TN Rains | இன்று இரவு இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது..!! - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Chennai Meteorological Department has informed that 15 districts including Chennai, Tiruvallur, Erode, Coimbatore, Salem, Kallakurichi, Villupuram are likely to receive rain in the next 2 hours
06:55 PM Sep 08, 2024 IST | Mari Thangam
tn rains   இன்று இரவு இந்த  மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது       வானிலை ஆய்வு மையம் அலர்ட்
Advertisement

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், ஈரோடு, கோவை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், நாமக்கல், சேலம், கள்ளுக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

08.09.2024 மற்றும் 09.09.2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 10.09.2024 முதல் 14.09.2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more ; 29 பதக்கங்கள்.. 18-வது இடத்தில் இந்தியா..!! பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024-ல் பதக்கம் வென்றவர்களின் பட்டியல் இதோ..

Tags :
Advertisement