அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்ட 'Apple Vision Pro' ஹெட்செட்.!! சென்னை மருத்துவர்கள் புரட்சி.!!
சென்னையில் உள்ள GEM மருத்துவமனையின் அறுவைசிகிச்சை நிபுணர்கள் இப்போது ஆப்பிள் விஷன் ப்ரோ(Apple Vision Pro) ரியாலிட்டி ஹெட்செட்களைப் பயன்படுத்தி லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகளைச் செய்கிறார்கள், இதில் பித்தப்பை பிரச்சினைகள், வயிற்றுப் புற்றுநோய், ஃபிஸ்துலாக்கள் மற்றும் குடலிறக்கம் போன்ற அறுவை சிகிச்சைகளும் அடங்கும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அறுவைசிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் மற்றும் ஜிஇஎம் மருத்துவமனையின் சிஓஓ டாக்டர் R பார்த்தசாரதி, " இந்த உயர் தொழில்நுட்ப சாதனங்களில் உள்ள சில குறிப்பிடத்தக்க நன்மைகள் மிகவும் துல்லியமான அறுவை சிகிச்சைகளை மிகவும் எளிதாக்குகிறது" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய டாக்டர் பார்த்தசாரதி விசுவல் ப்ரோ ஹெட்செட் தாமதமின்றி நிகழ்நேர பரிமாற்றத்தை வழங்குகிறது என தெரிவித்துள்ளார். இது மேம்பட்ட பார்வை மற்றும் நிஜ உலகிற்கான இணைப்பை வழங்குகிறது எனக் கூறிய அவர் அறுவை சிகிச்சை நிபுணர்கள் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை காட்சிகள் மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவற்றை ஒரே நேரத்தில் காண்பதற்கும் இவை உதவுகிறது என தெரிவித்தார். அறுவை சிகிச்சையின் போது உடல் உறுப்புகளை விரிவாக பார்ப்பதற்கு இந்த ஹெட் செட்டுகள் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை 30க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளில் Apple Vision Pro ஹெட்செட்டுகளை பயன்படுத்தியதாக டாக்டர் பார்த்தசாரதி தெரிவித்திருக்கிறார். மேலும் அத்யாவசியப்படும் சமயங்களில் தொடர்ந்து பயன்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட் செட் இன் நன்மைகள் குறித்து விவரித்த டாக்டர் பார்த்தசாரதி "அறுவை சிகிச்சையின் போது நிபுணர்களின் கருத்துகளைத் தடையின்றி பெற உதவுவதாக தெரிவித்தார். பேஸ் டைம் மூலம் மற்ற மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை கற்பிக்க உதவுவதோடு நீண்ட அறுவை சிகிச்சையின் போது கழுத்து வலியைத் தடுக்க உதவுகிறது என்றும் தெரிவித்தார்.
தினசரி நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பற்றிய விவாதத்தின் போது பேசிய டாக்டர் பார்த்தசாரதி " பொதுவாக அறுவை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மானிட்டர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் இருப்பதாக தெரிவித்தார். அதே நேரம் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் பயன்படுத்தும்போது அறுவைசிகிச்சை நிபுணர்கள் பல டேப்களைத் திறந்து வைத்திருக்கலாம் மற்றும் CT ஸ்கேன்கள் மற்றும் MRI ஸ்கேன்கள் உட்பட பல்வேறு தரவுகளை ஒரே நேரத்தில் பார்க்கலாம் எனவும் கூறினார்.
லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள், வயிற்றில் சிறிய கீறல்கள் செய்து, கேமரா போன்ற குழாயைச் செருகி நிகழ்நேர காட்சிகளை வழங்குகின்றன. அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பொதுவாக மானிட்டரில் காட்டப்படும்.
இங்கிலாந்தில், அறுவைசிகிச்சை நிபுணர்கள் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டை முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் பயன்படுத்தினர். இது eXeX என்ற செயலியுடன் இணைந்து செயல்பட்டது. இவை நிகழ் நேர டேட்டா ஸ்ட்ரீமிங் அறுவை சிகிச்சைக்கு தயார் படுத்துதல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான கருவிகளை தேர்ந்தெடுப்பதில் உதவியது. மேலும் மனிதத் தவறுகளை குறைப்பதன் மூலம் அறுவை சிகிச்சை மீதான நம்பிக்கையை அதிகரித்தது. வரும் காலங்களில் முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் இவை மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.
ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹெட்செட், பிப்ரவரியில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது, சந்தையில் மிகவும் சக்திவாய்ந்த VR ஹெட்செட்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஏனெனில் இவற்றின் நிகழும் நேரம் மற்றும் டிஜிட்டல் உலகிற்கு இடையேயான தடையற்ற டேட்டா டிரான்ஸ்மிஷன் காரணமாக அமைகிறது. விஷன் ப்ரோ ஹெட்செட்டை தொழில் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் கலவையாக வடிவமைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது .
$3,499( ரூ.2,92,113.67/-) விலையில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரவில்லை. எனினும் கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பல தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்ட நிறுவனங்களும் தொழில் வல்லுநர்களும் எப்படியாவது இந்த ஹெட்செட்டை வாங்க முயற்சி செய்து வருகிறார்கள்.