முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000!! அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.. உடனே அப்ளே பண்ணுங்க!!

Chennai Collector Rashmi Siddharth Jagade said that from 2024-25, students who have studied in Tamil medium from 6th to 12th standard in government-aided schools can also apply to get Rs. 1000 under the Tamil Nadu government's 'Innovation Girl' scheme.
10:23 AM Jul 11, 2024 IST | Mari Thangam
Advertisement

2024-25 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவிகளும் தமிழக அரசின் 'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்யலாம் என்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

Advertisement

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களது குடும்ப பொருளாதார நிலை காரணமாக உயர் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இதைப் போக்குவதற்காக உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னதாக துவங்கி வைத்தார்.

அதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. புதுமைப்பெண் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் இந்த திட்டத்தை அரசு பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

கோரிக்கையை  ஏற்ற முதல்வர் ஸ்டாலின் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு முடித்திருந்தாலும் 'புதுமைப்பெண்' திட்டத்தில் விண்ணப்பித்து மாதந்தோறும் ரூ.1000 பெறலாம் என்று அறிவிப்பு செய்தார். இந்நிலையில் தான் சென்னையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகள் 'புதுமைப்பெண்' திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டள்ளதாவது, பெண்‌ கல்வியை போற்றும்‌ விதமாகவும்‌, உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண்‌ சமூகம்‌ நாளைய தமிழகத்தை தாங்கும்‌ அறிவியல்‌ வல்லுநர்களாகவும்‌, மருத்துவராகவும்‌, பொறியாளராகவும்‌, படைப்பாளராகவும்‌, நல்ல குடிமக்களை பேணும்‌ உயர்கல்வி கற்ற பெண்களாகவும்‌, கல்வி அறிவு தொழில்நுட்பம்‌ நிறைந்த உழைக்கும்‌ சமூகத்தை சார்ந்தவராகவும்‌ உருவாக அடித்தளமாக "புதுமைப்‌ பெண்" என்னும்‌ உன்னதமான திட்டம்‌ தமிழ்நாடு முதலமைச்சரால்‌ தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகம்‌ முழுவதும்‌ சிறப்பான முறையில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ மூலமாக "புதுமைப்‌பெண்‌ திட்டத்தில்‌, அரசுப் பள்ளிகளில்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை படித்து மேற்படிப்பில்‌ சேரும்‌ அனைத்து மாணவிகளுக்கும்‌ உயர் கல்வி முடிக்கும்‌ வரை மாதம்‌ ரூ.1000 அவர்களின்‌ வங்கிக்‌ கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ சென்னை மாவட்டத்தில்‌ 11,015 மாணவிகள்‌ மாதம்‌ ரூ. 1000 பெற்று வருகின்றனர்‌. கடந்த ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில்‌ பயின்ற மாணவிகள்‌ மட்டுமே இந்த திட்டத்தால்‌ பயன் பெற்றனர்‌.

இதனைத்‌ தொடர்ந்து, 2024-25ஆம்‌ கல்வியாண்டு முதல்‌'புதுமைப்‌ பெண்‌" திட்டத்தின்‌ வாயிலாக அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழி கல்வியில்‌ படித்த மாணவிகளும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ தற்பொழுது விரிவுபடுத்தப்பட்டு, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழி கல்வியில்‌ படித்த மாணவிகளுக்கும்‌ உயர்கல்வி முடிக்கும்‌ வரை மாதம்‌ ரூ.1000 ‌வங்கிக்‌ கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்‌ என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எனவே. சென்னை மாவட்டத்தில்‌ உள்ள அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும்‌ மாணவியர்‌ 'புதுமைப்‌ பெண்‌" திட்டத்தில்‌ பயன்பெற அந்தந்தக்‌ கல்லூரியின்‌ சிறப்பு அலுவலர்‌ (நோடல் ஆஃபிஸர்) வாயிலாக விண்ணப்பித்து பயனடைய வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Chennai Collector Rashmi Siddharth JagadeInnovation Girl' scheme.tn governmentபுதுமைப் பெண் திட்டம்
Advertisement
Next Article