முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Chennai Budget | சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்..!! இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா..!!

08:41 AM Feb 21, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை மாநகராட்சியின் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

Advertisement

Chennai Budget | சென்னை மாநகராட்சியின் மேயராக பதவியேற்ற ஆர்.பிரியா குறுகிய காலகட்டத்திலேயே 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை 2022 ஏப்ரலில் தாக்கல் செய்தார். இதையடுத்து, 2023 மார்ச் மாதம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.340.25 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் 27 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மேலும், மக்களைத் தேடி மேயர், மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை உயர்த்தியது, காலை உணவு திட்டத்தை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று பிப்.21ஆம் தேதி மேயர் பிரியா தாக்கல் செய்யவுள்ளார். இதன் மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளது.

கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த பட்ஜெட் தயாரிப்பதற்கு துறை சார்ந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டன. ஏற்கெனவே பொது பட்ஜெட்டில் சிங்கார சென்னை, வடசென்னை உள்ளிட்டவைகளுக்கு பிரதான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநகராட்சி பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

English Summary : Greater Chennai Corporation budget

Read More : BJP Annamalai | கொங்கு மண்டலத்தை தட்டித்தூக்கிய பாஜக..!! திமுக – அதிமுகவுக்கு நடந்த பரிதாபம்..!!

Advertisement
Next Article