Annamalai: "திமுக ஆட்சியில் போதைப்பொருள் தலைநகரான சென்னை" - பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.!
Annamalai: நமது நாட்டின் கலாச்சார நகரமாக இருந்த சென்னை தற்போது போதை பொருட்களின் தலைநகரமாக மாறி இருக்கிறது என பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அண்ணாமலை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த சிலர் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான போதை பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களுக்கு தலைவனாக செயல்பட்ட திமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி தற்போது தலைமுறைவாக இருக்கிறார்..
போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை முடக்குவேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. போதை வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை பார்க்கும்போது தமிழகத்தில் போதை பொருள் விற்பனை ஜோராக நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
திமுகவின் இளவரசர் சின்னவருக்கு நெருக்கமான திராவிட முன்னேற்றக் கழக பிரமுகர் சிற்றரசு என்பவருக்கு சொந்தமான சஹாரா கொரியர் நிறுவனத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினார். அதனை படம் பிடித்த புதிய தலைமுறை ஊடகத்தினரை திமுகவினர் தாக்கியிருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என தெரிவித்திருக்கிறார். ஜாபர் சாதிக்கின் போதை மருந்து கடத்தலுக்கு இந்த சஹாரா கொரியர் நிறுவனம்தான் மைய புள்ளியாக அமைவதாக தகவல்கள் வருகின்றன என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது என பதிவு செய்த அண்ணாமலை, தமிழக மக்களுக்கு சேவை செய்யத்தான் ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். போதைப் பொருள்களை கடத்தும் முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கு அல்ல எனவும் தெரிவித்திருக்கிறார்.