கெமிக்கல் இல்லாத ஹார்லிக்ஸை இனி நீங்களே சுலபமாக வீட்டில் செய்யலாம்; எப்படி தெரியுமா?
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒன்று தான் ஹார்லிக்ஸ். பெற்றோர்கள் பலர் இதை குடித்தால் தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைத்து அதிக காசு குடுத்து கடையில் வாங்கி ஹார்லிக்ஸ் குடுப்பது உண்டு. ஆனால், அதனால் உடலுக்கு தீங்கு தான் அதிகம் ஏற்படும். இதனால் இனி கடைகளில் விற்கப்படும் எந்த பொடிகளையும் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். அதற்க்கு பதிலாக ஆரோக்கியமான ஹார்லிக்ஸை எந்த கெமிக்கலும் இல்லாமல் வீட்டிலேயே தயாரித்து கொடுங்கள்..
அதற்க்கு முதலில், ஒரு கப் அளவு கோதுமை எடுத்து தண்ணீரில் இரண்டு முதல் மூன்று முறை அலசி விடுங்கள். பிறகு அந்த கோதுமையை, காட்டன் துணியில் பரப்பி ஒரு வாரத்திற்கு வெயிலில் காய வையுங்கள். பின்னர் நன்கு காய்ந்த கோதுமையை, வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும் வரை வறுத்துவிடுங்கள். இப்பொது இதை ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிடுங்கள். பின்னர், 50 கிராம் பாதாம் பருப்பை லேசாக வறுக்கவும். அதேபோல் 50 கிராம் நிலக்கடலையையும் வறுத்து நன்கு ஆற வைத்து விடுங்கள்.
இப்போது, வறுத்து ஆற வைத்த கோதுமையை ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்கவும். பிறகு அதை சலித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது வறுத்து ஆற வைத்த பாதாம் பருப்பு மற்றும் நிலக்கடலையை தனி தனியாக அரைத்து சலித்து கொள்ளுங்கள். இப்போது அரைத்த எல்லா பொடிகளையும் ஒன்றாக கலந்து விடுங்கள். பிறகு, 50 கிராம் பால் பவுடர், அரை கப் வெள்ளை சர்க்கரை சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்து அதை கோதுமை மிக்ஸில் கலக்கவும். இப்போது இந்த கலவையில், ஒரு தேக்கரண்டி கோகோ பவுடர் மற்றும் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
இப்போது ஆரோக்கியமான ஹோம் மேட் ஹார்லிக்ஸ் ரெடி. இதை ஈரமில்லாத காற்று புகாத டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள். இதை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை பெரியவர்களும் தாரளமாக குடிக்கலாம்.
Read more: நின்றபடி தண்ணீர் குடித்தால் ஆபத்தா? நிபுணர் கூறும் அறிவுரை…