உங்கள் தொப்பையை குறைக்க இதை விட சிறந்த வழி கிடையாது!!!
பலருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தொப்பை தான். ஆம், தொப்பையை குறைக்க பல ஆயிரங்கள் செலவு செய்பவர்கள் உண்டு. என்ன தான் செய்தாலும் ஆரோக்கியமான உணவு முறை இல்லாமல் தொப்பையை கரைக்க முடியாது. அந்த வகையில், தொப்பையை குறைக்க எது சிறந்த வழி என்று நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். நீங்கள் ஒரு சில கஞ்சியை குடிப்பதால், உங்கள் வயிற்றில் இருக்கும் தேவை சதை குறையும். அதில் ஒன்று தான் பார்லி கஞ்சி. அதுவும் இந்த கஞ்சியுடன் காய்கறிகளை சேர்த்து செய்யும் போது, ஆரோக்கியம் மட்டும் இல்லாமல் சுவையாகவும் இருப்க்கும்.
இதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பார்லி அரிசி 1 கப் போட்டு நன்கு வறுக்க வேண்டும். சூடு ஆறிய பிறகு, அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருக்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் அதில், பொடியாக நறுக்கிய 1 வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். இப்போது அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடுங்கள்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய 1 கேரட், 5 பீன்ஸை சேர்த்து 3-4 நிமிடம் வதக்குங்கள். இப்போது அதில், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள், 1/2 டீஸ்பூன் சீரகத் தூள் சேர்த்து கிளறி, அதனுடன் 5 கப் நீரை ஊற்றி கிளறி விடுங்கள். பின்னர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு தூவுங்கள்.
பின் பொடித்து வைத்திருக்கும் பார்லி அரிசியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி விடுங்கள். இப்போது சுவையான வெஜிடேபிள் பார்லி கஞ்சி ரெடி..