அட இது தெரியாம போச்சே!! ரேஷன் கார்டு இருந்தால் போதும் இந்த வேலை உறுதி!!
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் வேலை வாய்ப்பு திட்டம் குறித்து பார்க்கலாம்.
இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கவும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும், அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையோராக மாற்றவும் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய ஊரக அமைச்சகத்தின் ‘தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா என்ற திட்டம், கிராமப்புற இளைஞர்களை தொழிலாளர் சக்தியாக மாற்றி வருகிறது. இந்த திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் அவ்வப்போது மறுபரிசீலனை செய்து அமல்படுத்தப்படுகிறது. மேலும், நிதி ஆயோக்கும், இத்திட்டத்தை மதிப்பீடு செய்துள்ளது.
இந்த திட்டம், 60:40 என்ற விகிதத்தில் மத்திய / மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. கடந்த 2014-15ம் ஆண்டிலிருந்து இதுவரை 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது, நாடு முழுவதும், பல பயிற்சி மையங்களில் 1.28 லட்சம் பேர் பயிற்சி பெற்றுவருகின்றனர். இத்திட்டத்தை கீழ், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளின் கீழ் இலவசமாக திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களில் குறைந்தபட்சம் 70% கட்டாய ஏதேனும் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தையும் இத்திட்டம் கொண்டுள்ளது.
யார் யார் விண்ணப்பிக்க முடியும்?
கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தால் பராமரிக்கப்படும் ஏழைகளின் பங்கேற்பு அடையாள பட்டியலில் உள்ள ஏழைகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். அதே போல MGNREGA குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இதற்கு விண்ணபிக்கலாம். அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை வழங்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் TNSRLM இன் கீழ் SHG இல் ஒரு குடும்ப உறுப்பினராக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் விண்ணபிக்கலாம்.
அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச தங்கும் விடுதியும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி குடியிருப்பு அல்லாத பயிற்சி பெறுபவர்களுக்கு பயணப்படியாக நாள் ஒன்றிற்கு ரூ.125 வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அனைத்து விண்ணப்பதாரர்களும் சான்றிதழ் வழங்கப்படும். குறைந்தபட்ச மாத வருமானம் ரூ.6000/- அல்லது மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமல், பயிற்சியளிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பணியமர்வின் போது ஊதியம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
Kaushal Panjee என்ற திறன் பதிவேடு மொபைல் செயலியை மத்திய ஊரக அமைச்கம் வடிவைத்துள்ளது அதன் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது https://kaushalpanjee.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Read more ; 2000 ஆண்டு பழமை.. மழைக்காடுகளுக்கு உள்ளே புதைந்து கிடந்த ‘மாயன் நகரம்’ – எங்கு இருக்கு தெரியுமா?