ஆன்லைனில் பட்டா மாற்றம்.. தாசில்தார் ஆபிஸ்க்கு போக தேவையே இல்லை..!! இந்த செயலி போதும்..
பட்டா நில உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ஆவணம் உள்ளது. வருவாய் துறை சார்பாக இந்த ஆவணம் வழங்கப்பட்டு வருகிறது. சர்வே எண், நில உரிமையாளரின் பெயர், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் பட்டாவில் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் ஆன்லைனிலே பட்டா மாற்றம் செய்வது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் தாலுகா அலுவலகங்களில் அதற்கான பணிகள் முறையாக நடப்பதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வாகபத்திரப்பதிவு அடிப்படையில் தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றும் திட்டம் 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.
வருவாய்த் துறையின் மூலமாக 25-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்குவதில் மாவட்ட அளவிலான செயல்திறன் குறித்தும், எங்கு அதிகமாக பணிகள் நிலுவையில் இருக்கிறது என்பது குறித்தும், அவற்றை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் களைவதற்கான வழிவகைகள் குறித்தும், மக்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களின் நடைமுறையை மாற்றி அமைத்து அதை எளிதாக அவர்களுக்கு வழங்க வேண்டிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என சமிபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் வருவாய் துறை சார்பில் இணையவழியில் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி மற்றும் நகர்ப்புர புல வரைபடங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இணைய வழி சேவை மூலம் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் நிகழ்நிலைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுபவை என்பதால் இத் தகவல்களை பெற எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லைபட்டா மாறுதல் மனுக்களை மாநிலத்தில் உள்ள எந்தவொரு பொது சேவை மையத்தின் மூலமும் அளிக்கலாம். அதற்கு கட்டணமாக ரூ.60/- பொதுச் சேவை மையத்தில் பெறப்படுகிறது.இந்த மின்னணு சேவை மூலம், புலப்பட நகல்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அது போல் ஒரு இடத்தை விற்கும் போதும் வாங்கும் போதும் பட்டா யார் பெயரில் இருக்கிறது என்பதை அறியலாம். இந்த பட்டாவில் நிலத்தின் ஓனர் யார், நிலத்தின் சர்வே எண், இந்த நிலம் எந்த வகையை சேர்ந்தது, எந்த பகுதியில் அமைந்துள்ளது உள்ளிட்ட விவரங்களுடன் இந்த ஆவணம் தரப்படும்.
பட்டா, சிட்டாவில் பெயர்களை நீங்கள் மாற்றம் செய்ய முடியும். ஆனால் இதனை நீங்கள் ஆன்லைன் மூலம் செய்ய முடியாது. உங்கள் பகுதியில் உள்ள தாலுகா அல்லது கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பட்டா பரிமாற்ற படிவத்தை வாங்கி, படிவத்தில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, கையொப்பமிட்ட விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பித்தால் 15 முதல் 30 நாட்களுக்குள் புதிய பட்டாக்கள் வழங்கப்பட்டுவிடும்.
Read more ; Viral | தீயில் எரியாத ஓரியோ பிஸ்கட்.. கேன்சரை பரப்பும் ரசாயணம் இருக்கா..? உண்மை என்ன..?