Viral | தீயில் எரியாத ஓரியோ பிஸ்கட்.. கேன்சரை பரப்பும் ரசாயணம் இருக்கா..? உண்மை என்ன..?
அமெரிக்காவின் உணவுத்தரக்கட்டுப்பாட்டு மையம் போல, இந்தியாவின் மத்திய உணவு & தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதிகளுக்கேற்ப தயாரிக்கப்படும் பிஸ்கட்டுகள், இந்திய சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பை கொண்டுள்ளன. அந்த வரிசையில் ஓரியோ பிஸ்கட்டும் இடம் பெற்றுள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் நொறுக்கு தீனிகளில் ஓரியோ பிஸ்கட்டும் ஒன்று..
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. வெளியான வீடியோவில், ஓரியோ பிஸ்கட்டை ஒருவர் எரித்து காண்பிக்கிறார். அப்போது தொடக்கத்தில் இருந்து பிஸ்கட், ஒன்றும் ஆகவில்லை. அதில் பயன்படுத்தப்படும் கிரீம் ஒருகட்டத்தில் உருகி வழிந்தாலும், பிஸ்கட் என்பது அப்படியே இருக்கிறது. இதனால் ஓரியோ பிஸ்கட்டில் உயிருக்கு ஆபத்தான கெமிக்கல் பயன்படுத்தப்படுவதாகவும், நெட்டிசன்கள் பல தகவல்களை பகிர்ந்து வீடியோவை வைரலாகி இருந்தனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியில் அடைந்தனர்.
அந்த வீடியோ (@Space_PatriQt17) கணக்கின் மூலம் டிசம்பர் 19, வியாழன் அன்று பதிவேற்றப்பட்டது, இதுவரை 36Kக்கும் அதிகமான விருப்பங்களையும் 10.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது. வெளியான வீடியோவிற்கு ஒரு பயனர் "நெருப்பை விட பால் வலிமையானதா?" என கேள்வி எழுப்பினார். "ஓரியோ குக்கீகளால் செய்யப்பட்ட வீடு தீயில் இருந்து தப்பிக்க முடியுமா?" இன்னொரு பயனர் கேலியாக கேட்டார். ஓரியோ எனக்கு பிடித்த ஒன்று. இனி நாம் ஓரியோஸ் சாப்பிட மாட்டேன் என்று மற்றொரு பயனர் பதிவிட்டிருந்தார்.
கோர்க் ஏஐ பதில் : இதுகுறித்து, எலான் மஸ்கின் கோர்க் ஏஐ (Gork AI) தளம் அளித்த பதிலில், ஓரியோ பிஸ்கட்டில் உள்ள அதிக சர்க்கரை, பாதுகாப்பான அடுக்கை உருவாக்கும். பனை எண்ணெய், பிஸ்கட் விரைந்து எரிவதில் இருந்து பாதுகாக்கும். சோயா லெசித்தின் வெப்பத்தின் கீழ் பிஸ்கட்டை முடிந்தளவு பாதுகாக்கும். கோகோ கலக்கப்பட்டு, முன்னதாகவே அவை பேக்கிங் முறையில் தயார் செய்யப்படுவதால், பிஸ்கட் எரிய இயல்பாகவே சற்று தாமதம் ஆகும் அல்லது குறிப்பிட்ட நேரம் வகையில் அவை பாதுகாக்கப்படும். ஓரியோ நிறுவனத்தின் பேக்கிங்கில் கூறப்படும் மூலதனப்பொருட்கள் மற்றும் பிற சேர்மங்களை எடுத்துக்கொண்டால், ஓரியோவில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் ஏதும் இல்லை என கோர்க் ஏஐ தெரிவிக்கிறது.
Read more ; பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரர்கள் 16 பேர் பலி!. பாகிஸ்தானில் அதிகரிக்கும் பதற்றம்!