ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா..? ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு..!!
வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னல் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். ரெப்போ ரேட் எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமின்றி 6.5 சதவிகிதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நிதிக்கொள்கைக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளின் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 6.5% என்ற அளவிலேயே தொடர்கிறது.
நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பணவீக்க விகிதம் 5%-க்கும் மேல் தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கணித்துள்ளார். பணவீக்க விகிதத்தை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கைகள் தொடரும் என கூறியுள்ளார்.