அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி வட்டியில் மாற்றம்..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!
ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான மத்திய அரசு ஊழியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 7.1% என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2024-25ஆம் நிதியாண்டில் பொது வருங்கால நிதி மற்றும் இதர வருங்கால நிதிக்கான வட்டி விகிதம் 7.1 சதவிகிதமெனவும், ஜூலை 1,2024 முதல் செப். 30,2024 வரையிலான காலக்கட்டத்துக்கு பொருந்துமெனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்- மத்திய அரசு பணிகள்), பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (சிபிஎஃப்- இந்தியா), மாநில ரயில் வருங்கால வைப்பு நிதி, அனைந்திந்திய பணிகள் வருங்கால வைப்பு நிதி, இந்திய ஆயுதங்கள் துறை (ஐஓஎஃப்எஸ்) வருங்கால வைப்பு நிதி மற்றும் பொது வைப்பு நிதி (ஆயுத பணிகள்) ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் 7.1% என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டிலும் இதே வட்டி விகிதம் இருந்தது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரத்துக்கான வட்டி விகிதம் முறையே 8.2 சதவிகிதம் மற்றும் 7.7 சதவிகிதம் ஆகியவற்றில் எந்தவித மாற்றத்தையும் இந்த காலாண்டில் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.