BREAKING | கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சந்திரபாபு நாயுடு..!! யாருடன் தெரியுமா..?
என்.டி.ஏ. கூட்டணியில் தான் தெலுங்கு தேசம் கட்சி நீடிக்கிறது எனக்கூறி கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்திரபாபு நாயுடு.
இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது. அதேசமயம் பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஸ்குமாரின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெறவுள்ள என்.டி.ஏ. கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி கலந்து கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். பாஜக, ஜன சேனா, தெ.தே.க. கட்சிகள் இணைந்து பணியாற்றியதால் தான் ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக கூறிய அவர், என்.டி.ஏ. கூட்டணியில் தான் தெலுங்கு தேசம் கட்சி நீடிக்கிறது எனக்கூறி கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் 2019ஆம் ஆண்டு பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் இணைய அழைப்பு விடுத்தவர் சந்திரபாபு நாயுடு. அதுபோல 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி உருவாக காரணமாக அமைந்தவர் நிதிஸ் குமார். தற்போது இருவருமே பாஜக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மோடி..!! மொத்த அமைச்சரவையும் கலைப்பு..!!