முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Chandraayan 3 தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' என்ற பெயரை அங்கீகரித்த சர்வதேச வானியல் ஒன்றியம்.!!

08:29 PM Mar 24, 2024 IST | Mohisha
Advertisement

‌சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் தளத்திற்கு சிவசக்தி என பெயரிடப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில் சர்வதேச விண்வெளி யூனியனும் அந்த தளத்திற்கு சிவ சக்தி என பெயரிடுவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

Advertisement

பிரதமர் மோடி அறிவித்த 6 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச வானியல் ஒன்றியம் கிரக அமைப்புகளுக்கான பெயரிடும் பணிக்குழு சந்திராயன் 3 விக்ரம்  லேண்டெர் தரையிறங்கும் இடத்திற்கு ஸ்டேடியோ சிவசக்தி என்ற பெயரை அங்கீகரித்தது.

சந்திரனுக்கான இந்தியாவின் மூன்றாவது மிஷனாக சந்திராயன் 3 கடந்த வருடம் ஜூலை மாதம் 14 ஆம் தேதி அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு ஆகஸ்ட் 23 அன்று விக்ரம் லாண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. கட்டுப்படுத்தப்பட்ட சந்திர தரையிறக்கத்தை அடைந்த 4-வது நாடாகவும் இந்தியா சாதனை படைத்தது.

சந்திரனில் தரையிறங்கிய பத்து நாட்களில் ஆய்வு செய்த பிறகு லண்டன் மற்றும் ரோவர் ஆகிய இரண்டும் ஓய்வு பயன்முறைக்கு சென்றது. இதனிடையே அவற்றில் உள்ள புரபல்சன் தொகுதியானது லேண்டரிலிருந்து பிரிந்து சந்திர சுற்றுப் பாதையில் இணைந்தது.

சந்திராயன் 3 நிலவில் தரையிறங்கிய தளத்திற்கு சிவசக்தி என பெயரிடுவதாக பிரதமர் மோடி அறிவித்தார் . சிவம் மனித குல நன்மைகளுக்கான தீர்வை கொண்டிருக்கிறது. சக்தி அந்தத் தீர்வுகளை செயல்படுத்துவதற்குரிய ஆற்றலை வழங்குகிறது. இதன் காரணமாக சிவசக்தி என பெயரிடப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

சிவசக்தி என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த IAU இந்திய புராணங்களின்படி சிவம் என்பது ஆண் பாலையும் சக்தி என்பது பெண் பாலையும் குறிக்கின்ற சொல். இதில் சிவசக்தி என்பது ஆண் மற்றும் பெண் சக்தி இரண்டையும் ஒருங்கிணைத்து சொல்லப்படுகின்ற ஒரு கூட்டிச்சொல் என சிவ சக்தி என்ற பெயருக்கு விளக்கம் அளித்திருக்கிறது.

Read More: RR VS LSG | சாம்சன், பராக் அபாரம்.!! ராஜஸ்தான் ஆதிக்கத்தில் சரணடைந்த லக்னோ..!!

Tags :
Chandraayan 3IAUIsroPM Modisiva sakthi
Advertisement
Next Article