For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பான்-அதார் இணைப்பு: அபராதம் மட்டும் ரூ.601.97 கோடி..!! மத்திய நிதித்துறை முக்கிய அறிவிப்பு.!

05:18 PM Feb 07, 2024 IST | 1newsnationuser7
பான் அதார் இணைப்பு  அபராதம் மட்டும் ரூ 601 97 கோடி     மத்திய நிதித்துறை முக்கிய அறிவிப்பு
Advertisement

அதார் அடையாள என்னுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ஜூன் 30-ம் தேதிக்கு பிறகு செயல்படாது என மத்திய நிதித்துறை அறிவித்திருக்கிறது. பான் கார்டுகள் அதார் அட்டைகளுடன் இணைப்பதற்கு ஜூன் 30-ம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தேதிக்குள் இணைக்கப்படாத பான் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் மத்திய நிதித்துறை தகவல் வெளியிட்டு இருந்தது.

Advertisement

இந்நிலையில் ஜூலை மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் 31ம் தேதி வரை 11.68 கோடி பான் கார்டுகள் அதார் அட்டைகளுடன் இணைக்கப்படாமல் இருப்பதாக மத்திய நிதித்துறை பாராளுமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. மேலும் பான் கார்டை அதாருடன் இணைக்காத நபர்களிடமிருந்து அபராதமாக ரூ.601.97 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் வருமான வரி செலுத்துவதற்கு பயன்படுத்த முடியாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் வருமானவரிச் சலுகைகள் தொடர்பான பணப்பரிவர்த்தனைகளும் அதார் அட்டைகளுடன் இணைக்கப்படாத பான் கார்டுகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது. எனவே பான் கார்டை அதார் அட்டையுடன் இணைக்காதவர்கள் உடனடியாக 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி இணைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Tags :
Advertisement