ஹைய்யா.! இனி பள்ளிகளுக்கும் வரப்போகுது 'ஒரே தேசம் ஒரே ஸ்டுடென்ட் ஐடி'.! இதன் சிறப்புகள் என்ன.? சூப்பரான அறிவிப்பு.!
2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின்படி ஒரே தேசம் ஒரே மாணவர் ஐடி திட்டம் இன்று மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தேசம் முழுவதும் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அதார் அடையாள எண் போன்று மாணவர்களுக்கு தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவேட்டை மத்திய அரசு உருவாக்கியது.
இதன்படி மாணவர்களுக்கு 12 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான அடையாள எண் உருவாக்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் கல்வி மற்றும் சாதனைகளை கண்காணிக்க முடியும் என தெரிவித்திருந்தது. மேலும் இந்தத் திட்டமானது நாடு முழுவதும் உயர்கல்வி பயிலும் மாணவர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நாடு முழுவதிலும் இரண்டு கோடியே 20 லட்சம் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அரசின் ஒரே தேசம் ஒரே மாணவர் ஐடி திட்டத்தில் இணைந்து தங்களது தானியங்கி அடையாள அட்டையை பெற்றிருக்கின்றனர்.
இந்நிலையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களிடையே அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான தேசிய ஐடி திட்டம் தற்போது பள்ளி மாணவர்களிடமும் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசின் கல்வி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இந்தத் திட்டத்தை ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களில் இருந்து பிஹெச்டி பயிலும் மாணவர்கள் வரை அனைவருக்குமான திட்டம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இந்த ஒரே தேசம் ஒரே மாணவர் ஐடி திட்டத்தை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் கல்வி தொடர்பான சான்றிதழ்களை ஆன்லைனில் சேமிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த புதிய ஐடியின் மூலம் ஒரு மாணவரின் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை அவரது தகவல்கள் அனைத்தையும் கண்காணிப்பதற்கும் விவரங்களை தெரிந்து கொள்வதற்கும் இது எளிமையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி கல்வி என்பது மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த மாநில அரசுகளுக்கு விருப்பம் இருந்தால் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்து இருக்கிறது இது தொடர்பாக பல மாநில அரசுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.