For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை.‌‌.. பெற்றார் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சம்‌ ஆக உயர்வு

Central Govt Scholarships... Income Limit Raised To Rs 2.50 Lakhs
07:26 AM Oct 27, 2024 IST | Vignesh
மத்திய அரசு வழங்கும் உதவித்தொகை ‌‌   பெற்றார் ஆண்டு வருமான வரம்பு ரூ 2 50 இலட்சம்‌ ஆக உயர்வு
Advertisement

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2024-25 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

Advertisement

இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சம், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள்.31.10.2024, கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள்.15.11.2024 ஆகும்.

புதுப்பிப்பு

இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ( National Scholarship Portal) Renewal Application என்ற இணையதளத்தில் (Link) OTR Number (One Time Registration) பதிவு செய்து 2024-25 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்தல் (Renewal) மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் முறையே 8 மற்றும் 10ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாகதேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும். எனவே 60சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகைத்தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களைஉள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.

மேற்படி OTR Number பயன்படுத்தி 2024-25 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்குமாறு.

Advertisement