For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாவ்..! 60 % மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை...!

Central Govt Scholarship for students with 60% and above marks
06:49 AM Oct 20, 2024 IST | Vignesh
வாவ்    60   மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை
Advertisement

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் மாணவ/ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவ/ மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

Advertisement

இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 இலட்சம் இத்திட்டத்தின் கீழ் மாணவ/ மாணவியர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2024 ஆகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள்: 15.11.2024 ஆகும். இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ/ மாணவியர்கள் தேசிய கல்வி ஊக்கத்தொகை இணையத்தில் (National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் (Link) சென்று OTR Number (One Time Registration) 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பித்தினை புதுப்பித்தல் (Renewal) மேற்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள், முறையே 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவ/ மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும். எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது கைப்பேசி எண் (Mobile Number) மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் OTR Number & Password பதிவுசெய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு வரப்பெறும்.

மேற்படி, OTR Number பயன்படுத்தி 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியது (Fresh Application) விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்துகொள்ள National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறலாம்.

Tags :
Advertisement