'UG/B.E' பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு..!! ரூ.1,12,400/- வரை சம்பளம்.! அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்.!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கான்பூர் நகரில் இயங்கி வரும் நேஷனல் சுகர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி நேஷனல் சுகர் இன்ஸ்டிட்யூட்டில் காலியாக உள்ள சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தகுதியும் விருப்பமும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் இளங்கலை அறிவியல் அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சுகர் டெக்னாலஜியில் முதுகலை பட்டயம் பெற்றிருப்பது அவசியமாகும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 56-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எஸ்.சி/எஸ்.டி, பி.டபிள்யு.டி பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயதுத் தொடர்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.35,400 – 1,12,400/- வரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் கிடையாது. மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் விண்ணப்ப படிவத்துடன் சான்றிதழ்களை இணைத்து மூத்த நிர்வாக அதிகாரி, தேசிய சர்க்கரை நிறுவனம், கல்யாண்பூர், கான்பூர்-208017 என்ற முகவரிக்கு தபால் மூலம் 28.02.2024 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய விவரங்களை அறிய nsi.gov.in என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.