முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

PM-WANI | 'இந்தியா முழுவதும் இலவச இன்டர்நெட் வந்தாச்சு..' மத்திய அரசின் அசத்தலான திட்டம் .!! முழு விவரம்.!!

05:30 AM May 13, 2024 IST | Mohisha
Advertisement

பிரதம மந்திரியின் இலவச Wifi திட்டமான PM-WANI திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் பொது இடங்களில் இலவச இணையதள சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Advertisement

இந்தத் திட்டமானது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பயணங்களின் போது இணைய பயன்பாட்டை உறுதி செய்வதன் மூலம் டிஜிட்டல் இந்தியா பணியை முன்னெடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. PM-WANI திட்டம் நாடு முழுவதும் உள்ள மக்கள் இணைய பயன்பாட்டை பெற உதவியது.

PM-WANI திட்டத்தின் பயன்கள்:

அதிவேக இணையதள வசதி: PM-WANI திட்டம் அதிவேக இணைய சேவையை வழங்குகிறது. இதன் மூலம் தடையில்லா இன்டர்நெட் பிரவுசிங் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் ஆன்லைன் கேம் போன்றவற்றை பயனர்கள் அனுபவிக்கலாம்.

இலவச இன்டர்நெட் வசதி: இந்தத் திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற பல்வேறு பொது இடங்களில் மக்கள் இலவச இன்டர்நெட் வசதியை பயன்படுத்தலாம்.

செக்யூரிட்டி: PM-WANI திட்டம் பாதுகாப்பான வைஃபை நெட்வொர்க்கை வழங்குகிறது, இது உங்கள் டேட்டாக்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

பயன்படுத்துவதற்கு எளிமையான வசதி: PM-WANI திட்டத்தைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினியில் "PM-WANI" Wi-Fi நெட்வொர்க்கைத் தேர்ந்தெடுத்து, அங்கீகாரத்திற்காக OTP ஐ உள்ளீடு செய்து பயன்படுத்தலாம்.

PM-WANI திட்டத்தின் கீழ் இலவச Wi-Fi வசதியை எவ்வாறு பயன்படுத்துவது:

செல்போன் அல்லது மடிக்கணினியில் வைஃபை செட்டிங்ஸை ஓப்பன் செய்து கொள்ளவும்.

"PM-WANI" வைஃபை நெட்வொர்க்கைத் தேர்ந்தெடுக்கவும்.

இணைய சேவையை பயன்படுத்த உங்களை அங்கீகரிப்பதற்காக மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி உள்ளீடு செய்யவும்.

உங்களுக்கு அனுமதி கிடைத்ததும் இலவச வைஃபை வசதியை நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம்.

PM-WANI திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை பெற விரும்பினால் https://pmwani.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்தத் திட்டத்தை பற்றிய பிற தகவல்களை தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள 1800-266-6666 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம்.

Tags :
Free EifiFree For PublicHigh Speed InternetPM-WANI
Advertisement
Next Article