பெண்ணுக்கு ரூ.36,000 ஆண் வாரிசுகளுக்கு ரூ.30,000 வழங்கும் மத்திய அரசு...! எப்படி பெறுவது...?
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் சிறார்கள் தொழிற்க்கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2024-2025 கல்வியாண்டில் Β.Ε., B.TECH., BDS., M.B.B.S., B.ED., Β.Β.Α., B.C.A., B.PHARM, B.Sc. (Nursing), BPT., LLB., MCA., B.V.Sc., B.Sc (Agri), B.B.M., B.SC., BIO. Tech., B.F.Sc., B.Arch., போன்ற ஏனைய பல தொழிற்கல்வி பயில கல்லூரிகளில் சேர்ந்துள்ள முதல் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன், மகளுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை www.ksb.gov.in என்ற இணையதளம் வாயிலாக பூர்த்திசெய்து உரிய இணைப்புகளுடன் online-இல் அனுப்பி வைக்குமாறு டெல்லியிலுள்ள மைய முப்படைவீரர் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-2025-ஆம் ஆண்டில் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்கு ஆண்டுக்கு 36,000/-(, ஆண் வாரிசுகளுக்கு ஆண்டுக்கு ரூ30,000/-மும் வழங்கப்படுகிறது. இவ்விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இந்த கல்வி உதவித்தொகையானது 2024-2025-ம் ஆண்டில் முதல் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு மட்டுமேயானது.
12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் ஆன்லைன் மூலம் வருகின்ற 30.11.2024 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, தங்களது மகன், மகள்களை 2024-2025- ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வி பயில கல்லூரியில் சேர்த்துள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் சார்ந்தோர்கள் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.