For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை...!

06:08 AM May 16, 2024 IST | Vignesh
பாகிஸ்தான்  பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை
Advertisement

குடியுரிமை (திருத்த) விதிகள், 2024 வெளியிடப்பட்டபின் முதல் தொகுப்பு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் சில விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ்களை மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா வழங்கினார். விண்ணப்பதாரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த உள்துறை செயலாளர், குடியுரிமை (திருத்த) விதிகள், 2024-ன் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.

Advertisement

குடியுரிமை (திருத்த) விதிகள், 2024-ஐ மத்திய அரசு 2024 மார்ச் 11 அன்று அறிவிக்கை செய்தது. இதன் தொடர்ச்சியாக மதரீதியான துன்புறுத்தல்கள் அல்லது அவற்றால் ஏற்பட்ட அச்சம் காரணமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 31.12.2014 வரை இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

டெல்லியில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாட்டு பிரிவு இயக்குநர் தலைமையிலான அதிகாரம் அளிக்கப்பட்ட குழு உரிய பரிசீலனைக்குப் பின் 14 விண்ணப்பதாரர்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்தது. இதன் அடிப்படையில் இந்த விண்ணப்பதாரர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்பாட்டு பிரிவு இயக்குநர் சான்றிதழ்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டது.

Advertisement