மத்திய அரசில் வேலை.. கை நிறைய சம்பளம்.. B.E, B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!
மத்திய அரசில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகள் மற்றும் அதிகாரிகள் பணியிடங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (யுபிஎஸ்சி) மூலமாக நிரப்பப்படுகிறது. அந்த வகையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன் உள்ளிட்ட பதவிகளில் 457 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம் : சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் டெலி கம்யூனிகேசன் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகின்றன. மொத்தம் பணியிடங்கள் எண்ணிக்கை 457-ஆகும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நாடு முழுவதும் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து பி இ / பிடெக், எம்.எஸ்.சி உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு ஏற்ப கல்வி தகுதி மாறுபடும்.
வயது வரம்பு : வயது வரம்பை பொறுத்தவரை 21 வயது பூர்த்தியானவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் சலுகைகள் உண்டு.
தேர்வு முறை : ஸ்டேஜ் 1 (முதன்மை தேர்வு) மற்றும் ஸ்டேஜ் 2 (மெயின்ஸ்), ஸ்டேஜ் 3-ஆளுமை திறன் தேர்வு என மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் சென்னை மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : விண்ணப்ப கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. தகுதியும் ஆர்வமும் இருக்கும் தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க வரும் 22.11.2024 கடைசி நாளாகும்.
சம்பளம் : முதன்மை தேர்வு 09.02.2025-அன்று நடைபெறும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,637 சம்பளம் உண்டு. மத்திய அரசு விதிகளின் படி இதர சலுகைகளும் உண்டு. தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை https://upsc.gov.in/sites/default/files/Notif-ESEP-25-Engl-18092024.pdf கிளிக் செய்யவும்
Read more ; அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது..!! – விழுப்புரத்தில் பரபரப்பு